NEL
Home > Resources > பெரிய புத்தக வளங்கள் > கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான யோசனைகள்

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பெரிய புத்தகங்கள், கல்வி அமைச்சால் ஆங்கிலத்திலும் மூன்று தாய்மொழிகளிலும் கற்றல் கற்பித்தல் வளங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் முன்னோட்டச் சோதனை செய்யப்பட்டவை. இவ்வளங்கள் தனித்தன்மை வாய்ந்த சிங்கப்பூர் மண்வாசனை உடையவை. மேலும், இவை இளம் பருவ இருமொழி கற்றலுக்குத் துணைபுரிகின்றன. பாலர் பள்ளி ஆசிரியர்கள், வகுப்பில் கற்பித்தல் வளங்களாகப் பயன்படுத்துவதற்காக இந்தப் பெரிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெரிய புத்தகங்களைப்பற்றி மேலும் விவரம் அறிய, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அடிக்கடி எழும் வினாக்களைப் பார்க்கவும். உங்கள் பள்ளி இந்தப் பெரிய புத்தகங்களையொட்டிய கற்றல் நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால், இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். நாங்கள் விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வோம்.

இளம் மாணவர்களைப் பேணி வளர்த்தலுக்குரிய பெரிய புத்தகங்களை  நீங்கள் வகுப்பறையில் பயன்படுத்த உதவும் கூடுதல் வளங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.


பேணி வளர்த்தலுக்குரிய பாடக்கலைத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள பெரிய புத்தகங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிள்ளைகளின் மொழித்திறன்களை வளர்ப்பது என்று சிந்திக்கிறீர்களா? ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுகுமுறையைப் பயன்படுத்திப் பார்க்கலாமே?  

ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுகுமுறை பெரிய புத்தகங்களின்வழிப் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சிமிக்க கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தித் தருகிறது. இது பிள்ளைகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு  கேட்டல், பேசுதல், படித்தல் ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும் துணைபுரிகிறது. 

மேலும் விவரங்கள் பெற, இங்கே கிளிக் செய்யவும்.                                                         

 ஆசிரியர் துணையோடு வாசித்தல் என்னும் அணுமுறையை எவ்வாறு மேற்கொள்வது என அறியக் கீழ்க்காணும் காணொளியைப் பார்க்கவும்.